Wednesday, May 7, 2008

சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே...!

தேசியப் பரிசுப்பெற்ற பாடல்...


[சிங்கப்பூரில், 2005ஆம் ஆண்டு நடந்த தேசியப் பாடல் போட்டியில்,
முதல்பரிசு பெற்ற முத்தமிழ்ப் பாடல் இது; மேலும் 09/08/2006ஆம் நாள்,சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கத்தில் நடந்தேறிய, குடியரசின் 41-ஆம் ஆண்டு நாட்டுநாள் அணிவகுப்புப் பேரணியில், பல்லாயிரக் கணக்கான மக்கள்; தலைவர்கள் முன்னிலையில், இசைக்கோலம் கண்ட பெருமைக்கும் உரியது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் போட்டியில் பாடியவர்
திரு.எஸ்.குணசேகரன். நாட்டுநாள் அணிவகுப்புப் பேரணியில் பாடியவர், சிங்கப்பூர்த்
தொலைக்காட்சி வசந்தம் சென்றல் நட்சத்திரப் பாடகர் திரு. முகமது பஷீர். இயற்றியவர்
கவிஞரேறு அமலதாசன்.]






சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே...!



____கவிஞரேறு அமலதாசன்


சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே !

சிந்தைக்குள் இன்பம் பொங்கிப் பாயுதே !

எங்கள்பேர் வானின் எல்லை தாண்டியே

விண்மீனாய் வெற்றி வாகை சூடுதே !



எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

ஏற்றம் கொண்டிங்குச் செழித்தோங்கும்

திங்கள் போல பரிதி போல

சிங்கைத் தீவென்றும் ஒளிவீசும்!



இது எங்கள் தாயகம்!

எழில்சிந்தும் வாழ்வகம்!

இனங்கள் நான்கும் இணையாய் ஆளும்

சிங்கப்பூரகம்!



உரமான கலைகள் உயிரான மொழிகள்

உறவாடும் அன்பு வீடு!

திறமான புலமை திருவான தலைமை

தேனான இன்ப நாடு!



எந்நாளும் ஒற்றுமை இங்கில்லை வேற்றுமை

எல்லார்க்கும் நன்மை செய்யும்

சிங்கப்பூரகம்!

பொன்னான வாய்ப்புகள் புத்தாக்கச் சிந்தனை

பூஞ்சோலை யாக மணக்கும்

சிங்கப்பூரகம்!



எத்தனையோ மாற்றம் அத்தனையும் ஏற்றம்

எல்லாம்நல் லாக்கம்

சிங்கப்பூரகம்!

முத்தான வழிகள் முன்னேற்றப் படிகள்

முற்போக்குக் கோட்டம்

சிங்கப்பூரகம்!



சமையத்தில் இணக்கம் சரிநீதி முழக்கம்

சரியான இயக்கம்

சிங்கப்பூரகம்!

இமையம்போல் வளமை எண்ணம்போல் நிலைமை

எப்போதும் இளமை

சிங்கப்பூரகம்!



இது எங்கள் தாயகம்!

எழில்சிந்தும் வாழ்வகம்!

இனங்கள் நான்கும் இணையாய் ஆளும்

சிங்கப்பூரகம்!








No comments: